செய்திகள்

சுழல் 2-ம் பாகத்தில் கெளரி கிஷன்!

நடிகர் கதிர் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற சுழல் 2-ஆம் பாகத்தில் நடிகை கெளரி கிஷன் இணையவுள்ளார்.

DIN

நடிகர் கதிர் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற சுழல் 2-ஆம் பாகத்தில் நடிகை கெளரி கிஷன் இணையவுள்ளார்.

கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஷ்ரேயா ரெட்டி நடிப்பில் பிரம்மா, அனுசரண் இயக்கத்தில் உருவான இணையத் தொடர் சுழல். புஷ்கர் - காயத்ரி தயாரித்தனர்.

அமேசான் பிரைம் ஓடிடியில் கடந்த ஜூன் 17-ஆம் தேதி வெளியான இந்த இணையத் தொடர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

சாம்பலூர் என்ற மலைக் கிராமத்தில் வசிக்கும் சிறுமி மாயமாகிறார். அவரை கண்டுபிடிக் ககாவல் துறை ஆய்வாளராக வரும் கதிர் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார். இதனை மையமாகக் கொண்டு கிரைம் திரில்லராக எழுதப்பட்ட கதைதான் சுழல்.

இதற்கிடையே, இத்தொடரின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை எழுதி வருவதாக இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், சுழல் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை கெளரி கிஷன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை கெளரி கிஷன், 96 படத்தில் இளம் வயது த்ரிஷாவாகவும், மாஸ்டர், கர்ணன், அடியே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வசீகரத்தின் உறைவிடம்... ஜொனிதா காந்தி!

சுவர் இருப்பின் சித்திரம்... நிகிதா ஷர்மா!

காஷ்மீரில் சண்டை எப்போது முடிவுக்கு வரும்? ஃபரூக் அப்துல்லா பதில்!

ஊட்டல் தேவஸ்தானத்தில் ஆடிப்பெருக்கு விழா

நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள் அளிப்பு

SCROLL FOR NEXT