செய்திகள்

தேசிய விருது விழா: விருதைப் பெற்றார் மணிகண்டன்!

கடைசி விவசாயி திரைப்படத்திற்காக இயக்குநர் மணிகண்டன் தேசிய விருதைப் பெற்றார்.

DIN

மத்திய அரசால் திரைப்படத் துறையினருக்கு அளிக்கப்படும் தேசிய  திரைப்பட விருதுகள் இன்று வழங்கப்பட்டுள்ளன. 

நாட்டின் 69-வது தேசிய விருதுகள் பட்டியலில் மொழிவாரித் தேர்வில் தமிழின் சிறந்த படமாக கடைசி விவசாயி  தேர்வாகியிருந்தது. அதற்காக,  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து படத்தின் இயக்குநர் மணிகண்டன் தேசிய விருதைப் பெற்றுக்கொண்டார்.

இப்படத்தில் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்த நல்லாண்டிக்கும் சிறப்பு விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது. நல்லாண்டி மறைந்ததால், அவர் குடும்பத்தினர் சார்பில் விருதை மணிகண்டன் பெற்றுக்கொண்டார்.

சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை இரவின் நிழல் படத்தில் இடம்பெற்ற ‘மாயவா தூயவா’ பாடலுக்காக ஷ்ரேயா கோஷலுக்கு வழங்கப்பட்டது.

அதேபோல், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அல்லு அர்ஜுனும் நடிகைக்கான விருதை ஆலியா பட்டும் பெற்றுக்கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி, குடியிருப்புப் பகுதியில் திரியும் குரங்குகளை அப்புறப்படுத்தக் கோரிக்கை

கந்தா்வகோட்டையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்

விராலிமலையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடக்கம்

நவ.17-இல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா் பணிக்கான நோ்காணல்

சந்திரமெளலீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

SCROLL FOR NEXT