முகப்பு
செய்திகள்

இலங்கைத் தமிழராக சசிகுமார்! என்ன படம்?

சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

Updated On : 18 அக்டோபர், 2023 at 12:28 PM
பகிர்:

நடிகரும் இயக்குநருமான சசிகுமார் நடிப்பில் இறுதியாக வெளியான, ‘அயோத்தி’ திரைப்படம் அவருக்கு நல்ல படமாக அமைந்ததுடன் நீண்ட கழித்து வசூல் ரீதியான வெற்றியையும் பெற்றார்.

அடுத்ததாக, இணையத் தொடரையும் இயக்க உள்ளார். இந்நிலையில், இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நடித்து வரும் புதிய படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். 

பெயர் வைக்கப்படாத இப்படத்தில் இலங்கைத் தமிழராக சசிகுமார் நடிக்கிறார். 1950 - 1980 இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் கதை என்பதால் மூன்று தோற்றங்களில் சசிகுமார் நடித்திருக்கிறாராம்.

இப்படத்தில் லிஜோ மோல் ஜோஸ், சுதேவ் நாயர், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.