செய்திகள்

பாண்டவர் இல்லம் சீரியல் இறுதிநாள்! கொண்டாடிய நடிகர்கள்!

1216 எபிஸோடுகள் ஒன்றாக பணிபுரிந்து தற்போது பிரிவது வருத்தத்தைக் கொடுத்தாலும் அடுத்து புதிய திட்டங்களில் பணிபுரிவதற்காக இதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்: நடிகர்கள் உருக்கம்

DIN

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டவர் இல்லம் தொடர் இறுதிநாள் படப்பிடிப்பு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துள்ளது.

சன் தொலைக்காட்சியில் 2019 ஜூலை முதல் பாண்டவர் இல்லம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. பகல் நேர தொடர்கள் பெரும்பாலும் இல்லத்தரசிகளை இலக்காக வைத்தே எடுக்கப்படுகிறது. ஆனால், பாண்டவர் இல்லம் தொடர், அதன் நகைச்சுவை காட்சிகளுக்காக இல்லத்தரசிகளைத் தாண்டிய ரசிகர்களைப் பெற்றது. 

திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1.30 மணிக்கு இந்தத் தொடர் ஒளிபரப்பானது. பின்னர் முற்பகல் 11.30 மணிக்கு மாற்றப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பாண்டவர் இல்லம் மக்களை மகிழ்வித்து வருகிறது.

சகோதர்கள் 5 பேர் கொண்ட வீட்டில் அவர்களுக்கு மனைவியாக வருபவர்களிடையே நடக்கும் கதைதான் பாண்டவர் இல்லம். அவர்களைப் பழிவாங்க ஜமீன் குடும்பத்தினர் முயற்சிக்கின்றனர். 

செல்வம் சுப்பையா கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். இந்தத் தொடரில் பாப்ரி கோஷ், நரேஷ் ஈஸ்வர், குகன் சண்முகம், ஆர்த்தி சுபாஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

சமீபகாலமாக இந்தத் தொடர் குறைந்த அளவு டிஆர்பியைப் பெற்றுவந்தது. இதனால், பாண்டவர் இல்லம் தொடர் விரைவில் முடிவடையும் என ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்பட்டது. அது தற்போது உண்மையாகியுள்ளது.

பாண்டவர் இல்லம் தொடரில் இறுதிநாள் படப்பிடிப்பு நேற்று (அக்.17) நடைபெற்றது. இதில், பாண்டவர் இல்லம் தொடரில் கலைஞர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இறுதி நாளில் படப்பிடிப்பு முடிந்ததும், கேக் வெட்டி ஆரவாரமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

1216 எபிஸோடுகள் ஒன்றாக பணிபுரிந்து தற்போது பிரிவது வருத்தத்தைக் கொடுத்தாலும் அடுத்து புதிய திட்டங்களில் பணிபுரிவதற்காக இதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என நடிகர்கள் உருக்கம் தெரிவித்தனர். 

இது தொடர்பான புகைப்படங்களை நடிகை கார்த்திகா அண்ணாமலை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் கல்லணைக் கால்வாய் நீரில் மூழ்கி பலி

சிர்கா பெயிண்ட்ஸ் லாபம் 39 சதவிகிதம் உயர்வு!

டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ஜேசன் ஹோல்டர்!

மனதுக்கு குளிர்ச்சி... சாக்‌ஷி மலிக்!

“படங்கள் வெற்றிகளைத் தாண்டி,அந்த சந்தோசம் வேற மாதிரி!” நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

SCROLL FOR NEXT