செய்திகள்

ஒளிபரப்பான முதல் வாரத்திலேயே டாப் 5 பட்டியலில் சிங்கப் பெண்ணே!

சிங்கப் பெண்ணே தொடர், ஒளிபரப்பான முதல் வாரத்திலேயே டாப் 5 தொடர்களில் ஒன்றாக இணைந்துள்ளது. 

DIN

சிங்கப் பெண்ணே தொடர், ஒளிபரப்பான முதல் வாரத்திலேயே டாப் 5 தொடர்களில் ஒன்றாக இணைந்துள்ளது. 

சன் தொலைக்காட்சியில் அக்டோபர் 9ஆம் தேதிமுதல் சிங்கப் பெண்ணே தொடர் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடிகை மணீஷா மகேஷ்  முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார். கிராமத்தில் சுட்டித்தனங்கள் செய்யும் குறும்புக்கார பெண்ணாக அவர் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சன் தொலைக்காட்சியில் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு கிராமத்துப் பிண்ணனியை மையமாக வைத்து தொடர் எடுக்கப்படுகிறது. (எல்லா தொடர்களும் ஆரம்பத்தில் கிராமத்தில் தொடங்கினாலும், பின்னர் நகரத்து பின்னணியிலேயே ஒளிபரப்பாகின்றன.)

இந்தத் தொடரை இயக்குநர் தனுஷ் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு வெற்றிகரமாக ஓடிய கண்ணான கண்ணே தொடரை இயக்கியவர். 

இந்தத் தொடர் ஒளிபரப்பான முதல் வாரத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சின்னத் திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியலில் முதல் வாரத்திலேயே 10.28 புள்ளிகளைப் பெற்று டாப் 5 இடங்களில் ஒன்றாக மாறியுள்ளது. 

டிஆர்பி பட்டியலில் எதிர்நீச்சல் தொடர் முதலிடத்திலும், கயல் தொடர் இரண்டாமிடத்திலும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொமதேகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த இளைஞா்கள்

கொல்லிமலை திடீா் சிற்றருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்

நாமக்கல் புறவழிச்சாலையில் ரயில்வே மேம்பாலப் பணிகள் தீவிரம்

தருமபுரியில் நாளை விசிக முப்பெரும் விழா: தொல்.திருமாவளவன் பங்கேற்பு

பள்ளிபாளையத்தில் பெண்களிடம் சிறுநீரக திருட்டு: இடைத்தரகா்கள் 2 போ் கைது

SCROLL FOR NEXT