செய்திகள்

மீண்டும் முதலிடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்!

சமீபகாலமாக சரியான டிஆர்பி கிடைக்கவில்லை. தொடர் நீண்டுகொண்டே செல்வதும் இதற்குப் பெரிய காரணம்.

DIN

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த சில மாதங்களாக  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களுக்கான டிஆர்பி பட்டியலில் பின்தங்கியிருந்த நிலையில், தற்போது மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டுமுதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகிவருகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்தத் தொடர் அண்ணன், தம்பிகள் 4 பேரைச் சுற்றி அமையும் கதைக்களம் கொண்டது. இதில் ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

5 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பெருமை பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு உண்டு. அதுமட்டுமல்லாமல், ஆயிரம் எபிஸோடுகளைக் கடந்த விஜய் தொலைக்காட்சியின் முதல் தொடரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்தான்.

சமீபகாலமாக சரியான டிஆர்பி கிடைக்கவில்லை. தொடர் நீண்டுகொண்டே செல்வதும் இதற்குப் பெரிய காரணம். அதனால், தொடரை முடிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டது. அதனைத் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் விரைவில் முடியவுள்ளது. இதன் இறுதிக்காட்சி படப்பிடிப்பு கடந்த வாரம் நடைபெற்றது. 

விரைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பாகம் 2 வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகள் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் முடியவுள்ளதால் பார்வையாளர்கள் அதிகரித்துள்ளனர். இதனால், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் அதிக டிஆர்பி பெற்று பாண்டியன் ஸ்டோர்ஸ் முதலிடத்தில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராதாபுரம் அருகே சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற மக்கள் கோரிக்கை

2026 தோ்தலில் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி

தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்: ஏ.ஐ.சி.சி.டி.யு ஆலோசகா் எஸ்.குமாரசாமி

பாஜகவினா் ரத்த தானம்

ஆட்சியா் அலுவலகத்தில் சமுகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

SCROLL FOR NEXT