முகப்பு
செய்திகள்

விஜய் - 68 படத்தில் அஜ்மல்?

விஜய் 68 படத்தில் நடிகர் அஜ்மல் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:11 AM
பகிர்:

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. பாடல் காட்சி ஒன்றை எடுத்துள்ளனர்.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு தென்னாபிரிக்கா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் அஜ்மல் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் 'அஞ்சாதே’, ‘கோ’, ‘வெற்றிச்செல்வன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர்.

மேலும், இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த்,  வைபவ், சினேகா, லைலா, பிரியங்கா மோகன், மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.