கார்த்தி அறிவித்த புதிய அப்டேட்: ரசிகர்கள் குஷி!
கார்த்தி நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியாகியுள்ளது.
2022-ஆம் ஆண்டில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான படம் சர்தார். ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவான இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
சர்தார் படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இதனை எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள நடிகர் கார்த்தி அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும் வழக்குகள்: உச்ச நீதிமன்றம் வேதனை!
Advertisement
Advertisement
இந்த அறிவிப்பையடுத்து உற்சாகமடைந்துள்ள கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ்.மித்ரனின் ரசிகர்கள் கார்த்தியின் பதிவை சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
சர்தார் படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இதற்கு முன்பு விஷாலை வைத்து இரும்புத் திரை படத்தையும், சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ படத்தையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.