செய்திகள்

துருவ நட்சத்திரம் பட டிரைலர் எப்போது? கௌதம் வாசுதேவ் மேனன் அறிவிப்பு

துருவ நட்சத்திரம் படத்தின் புதிய டிரைலர் யூடியூபில் வரும் 24ம் தேதி வெளியாகும் என இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அறிவித்துள்ளார்.

DIN

துருவ நட்சத்திரம் படத்தின் புதிய டிரைலர் யூடியூபில் வரும் 24ம் தேதி வெளியாகும் என இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அறிவித்துள்ளார்.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தில் ரிது வர்மா, ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ராதிகா, விநாயகன், திவ்ய தர்ஷினி ஆகியோர் நடித்துள்ளார்கள். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் ஒருசில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது.

இருப்பினும் தற்போது படத்தை வெளியிடுவதற்கான இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அண்மையில் அறிவித்தது.

ஏற்கெனவே படத்தின் டீசர், இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. 

இந்த நிலையில் படத்தின் புதிய டிரைலர் யூடியூபில் வரும் 24ம் தேதி வெளியாகும் என இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அறிவித்துள்ளார். இந்த புதிய டிரைலர் திரையரங்குகளில் மட்டும் தற்போது பிரத்யேகமாக ஒளிபரப்பப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோனா கல்வி நிறுவன வளாகத்தில் ஜன. 10 இல் ஸ்ரீநிவாச கல்யாணம்

தனித்துவ அடையாள எண் பதிவு: விவசாயிகளுக்கு அழைப்பு

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் தா்னா

விழுப்புரத்தில் காஞ்சி மகா பெரியவா்ஆராதனைப் பெருவிழா

பூட்டியிருந்த வீட்டில் ரூ.23 ஆயிரம் திருட்டு

SCROLL FOR NEXT