செய்திகள்

லியோ ரூ.1,000 கோடி வசூலிக்காது: தயாரிப்பாளர் லலித் 

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள லியோ திரைப்படம் ரூ.1000 கோடி வசூலிக்காதென அதன் தயாரிப்பாளர் லலித் கூறியுள்ளார். 

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வியாழக்கிழமை வெளியானது.

தமிழகத்தில் பாதுகாப்பு காரணங்களால் அதிகாலை காட்சிக்கு மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. காலை 9 மணிக்குதான் முதல் காட்சி துவங்கியது. 

ரசிகர்களிடம், இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. மேலும், பைரசி தளங்களில் லியோ திரைப்படம் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உலகளவில் 6000 திரைகளில் வெளியான லியோ முதல்நாள் வசூலாக ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவே, இந்த ஆண்டில் வெளியான இந்திய திரைப்படங்களில் அதிக முதல்நாள் வசூலைப் பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், லியோ படத் தயாரிப்பாளர் லலித் குமார் நேர்காணல் ஒன்றில், “லியோ திரைப்படம் 1,000 கோடி ரூபாய் நிச்சயமாக வசூலிக்காது. ஏனெனில் வட இந்தியாவில் நாங்கள் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. மேலும் மல்டிபிளக்ஸில் வெளியாகாமல் சிங்கில்ஸ்கீரின்களில் அதிகமாக வெளியாகியுள்ளது. ஆனால் படம் நிச்சயமாக நல்ல வசூலினை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை” எனக் கூறியுள்ளார். 

அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படத்தின் முதல்நாள் சாதனையை லியோ முறியடித்தது போல ரூ.1,000 கோடியை முறியடிக்குமா என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT