சலார் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியாகவுள்ள சலார் திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியாகவுள்ள சலார் திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் உருவான கேஜிஎஃப் திரைப்படம் வசூலில் புதிய சாதனையை அடைந்ததுடன் வெளியான நாளிலிருந்து தற்போது வரை அந்த படத்தின் பிரம்மாண்டம் குறித்து பலரும் பாராட்டி பேசி வருகின்றனர். இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ.1,200 கோடி வசூலையும் அடைந்தது.
அதனைத் தொடர்ந்து, இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார். பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிக்க: லியோ: 4 நாள்களில் ரூ.400 கோடி வசூல்!
சலார் திரைப்படம் வரும் டிச.22 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், நடிகர் பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு சலார் திரைப்படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.