செய்திகள்

இணையத்தில் வைரலாகும் லப்பர் பந்து படத்தின் போஸ்டர்!

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிக்கும் லப்பர் பந்து படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

DIN

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிக்கும் லப்பர் பந்து படத்தின்  போஸ்டர் வெளியாகியுள்ளது.

நெஞ்சுக்கு நீதி படத்துக்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் லப்பர் பந்து. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

ஹரிஷ் கல்யான் மற்றும் அட்டகத்தி தினேஷ் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். வதந்தி வெப் தொடர் பிரபலம் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சுவாசிகா விஜய் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

மேலும், இப்படத்தில் பால சரவணன், தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், லப்பர் பந்து படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இப்படத்தின் டீசர், டிரைலர், வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

SCROLL FOR NEXT