செய்திகள்

பெண் போட்டியாளரை தாக்கினாரா விஷ்ணு? பிக் பாஸில் பரபரப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அக்‌ஷயாவை விஷ்ணு தாக்கியது போன்ற ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகின்றது.

DIN

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அக்‌ஷயாவை விஷ்ணு தாக்கியது போன்ற ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகின்றது.

பிக் பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இதுவரை அனன்யா, விஜய் ஆகியோர் போட்டியிலிருந்து எவிக்‌ஷன் முறையில் வெளியேறியுள்ளனர். பவா செல்லதுரை உடல்நிலை சரியில்லாததால் போட்டியிலிருந்து வெளியேறினார்.

இந்த நிலையில், இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு பிரதீப், யுகேந்திரன், நிக்‌ஷன், மணி சந்திரா, அக்‌ஷயா ஆகிய 6 பேர் பிக் பாஸின் இந்த வார கேப்டன் பூர்ணிமாவால் அனுப்பப்பட்டனர்.

இரு வீட்டாருக்கும் நடைபெற்ற டாஸ்க் ஒன்றில், ஐஸுவின் கால் பட்டு நிலைதடுமாறி விஷ்ணு கீழே விழுவது போல் முதல் ப்ரோமோ வெளியானது.

ஆனால், இதனை தவறாக புரிந்து கொண்ட விஷ்ணு அக்‌ஷயாவிடம் சண்டைக்கு செல்வது போல் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. மேலும், பெண் மீது எப்படி கை வைக்கலாம் என்று நிக்‌ஷன் கேள்வி எழுப்பும் காட்சிகளும் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளன.

இருப்பினும், அக்‌ஷயாவை விஷ்ணு தாக்கியது போன்று தெளிவான காட்சிகள் ப்ரோமோவில் வெளியாகவில்லை.

மேலும், போட்டியாளர் விஷ்ணுவின் செயல்களை கண்டித்து சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுடனான போட்டி புறக்கணிப்பு! பாகிஸ்தானுக்கு ஐசிசி எச்சரிக்கை!

பட்ஜெட் எதிரொலி: சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! இன்றைய நிலவரம்...

ஹிந்தியுடன் சமஸ்கிருதத்தையும் திணிக்க முயற்சிக்கும் பா.ஜ.க. அரசு: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் ஆயுதப் படைக் காவலர் தூக்கிட்டு தற்கொலை!

தவெக கொள்கைத் தலைவர்களுக்கு விஜய் மரியாதை

SCROLL FOR NEXT