முகப்பு
செய்திகள்

இயக்குநராகும் ஜோஜு ஜார்ஜ்!

பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:12 AM
பகிர்:

’ஜோசப்’, ‘ஒன்’, ‘நயாட்டு’, ‘ஜகமே தந்திரம்’ போன்ற படங்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஜோஜு ஜார்ஜ் மலையாளத்தில் முக்கியமான நடிகர். சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான ‘இரட்ட’ படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. விரைவில், இவர் நடித்த 'புலிமட, ‘ஆண்டனி’ ஆகிய படங்கள் திரைக்கு வர உள்ளன.

இந்நிலையில், ஜோஜு ஜார்ஜ் ‘பனி’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதற்கான, அறிவிப்பு விடியோவை வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தில் ஜோஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் அபிநயா, சீமா, சாந்தினி ஸ்ரீதரன், அபயா ஹிரண்மயி, சோனா மரியா ஆபிரகாம் உள்ளிடோரும் நடிக்கின்றனர். ஜோஜுவின் அப்பு பாத்து பப்பு தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஏடி ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

நடிகராக அங்கீகாரம் பெற்ற ஜோஜு ஜார்ஜ், இயக்குநராகவும் தனக்கான இடத்தைப் பிடிப்பார் என்கிற நம்பிக்கையில் உள்ளனர் ரசிகர்கள்!

முழு கட்டுரையைப் படிக்க →