முகப்பு
செய்திகள்

வேல்ராஜ் இயக்கத்தில் சசிகுமார்!

வேல்ராஜ் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நாயகனாக நடிக்க உள்ளார்.

Updated On : 24 அக்டோபர், 2023 at 5:47 PM
பகிர்:

நடிகரும் இயக்குநருமான சசிகுமார் நடிப்பில் இறுதியாக வெளியான, ‘அயோத்தி’ திரைப்படம் அவருக்கு நல்ல படமாக அமைந்ததுடன் நீண்ட கழித்து வசூல் ரீதியான வெற்றியையும் பெற்றார்.

அடுத்ததாக, இணையத் தொடரையும் இயக்க உள்ளார். இந்நிலையில்,  ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான வேல்ராஜ் இயக்கும் புதிய படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார்.

ஜேஎஸ்பி சதீஷ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. 

வேல்ராஜ் விஐபி, தங்கமகன் உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.