முகப்பு
செய்திகள்

பிக் பாஸ் பிரபலம் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு!

பிக் பாஸ் பிரபலம் முகேன்ராவ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:13 AM
பகிர்:

பிக் பாஸ் பிரபலம் முகேன்ராவ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 3-ன் டைட்டில் வின்னரான முகேன் ராவ், வேலன் திரைப்படத்தில் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து, வேலன் இயக்குநர் கவின் ராஜுடன் பெயரிடப்படாத படம் ஒன்றில முகேன் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான மை 3 வெப் தொடரிலும் நடித்து இருந்தார்.

இந்த நிலையில், அறிமுக இயக்குநர் டிஆர் பாலாவுடன் புதிய படத்தில் முகேன்ராவ் நடிக்கிறார். இப்படத்துக்கு ஜின் எனப் பெயரிடப்பட்டுள்ளது. முகேனுக்கு ஜோடியாக பவ்யா நடிக்கிறார்.

மேலும், இப்படத்தில் நிழல்கள் ரவி, ராதாரவி, வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, பால சரவணன், ஜார்ஜ் விஜய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

ஜின் திரைப்படத்துக்கு விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் இணைந்து இசையமைக்கின்றனர். 

இப்படத்தின், முதல் பார்வை போஸ்டர் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.