செய்திகள்

தலைவரே... ரஜினியைப் புகழ்ந்த அமிதாப்!

நடிகர் ரஜினிகாந்த்தின் பதிவுக்கு அமிதாப் பச்சன் பதிலளித்துள்ளார்.

DIN

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இசை - அனிருத்.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சன், ஃபகத் ஃபாஸில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது.

நடிகர் அமிதாப் பச்சன் இப்படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ரஜினிகாந்த், “த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் லைகாவின் ‘தலைவர் 170’ படத்தில் எனது வழிகாட்டியான ஸ்ரீ அமிதாப் பச்சனுடன் 33 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பணியாற்றுகிறேன்.  என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது!” எனப் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இதைப் பகிர்ந்த அமிதாப் பச்சன், “சார்.. நீங்கள் எப்போதும் என் அன்புக்குரியவர். உங்கள் படத்தின் பெயரைப் பாருங்கள். ‘தலைவர் 170’. தலைவர் என்றால் அது நீங்கள்தான். அதில் எதாவது சந்தேகம் இருக்கிறதா மக்களே? உங்களுடன் என்னை ஒப்பிட முடியாது” எனப் பதிலளித்துள்ளார்.

நடிகர்கள் ரஜினியும் அமிதாப் பச்சனும் நெருங்கிய நண்பர்கள் என்றாலும் இருவரும் இணைந்து, 'அந்தாகானூன்’ 'ஹேராஃப்தார்’, ‘ஹும்’ ஆகிய படங்களிலேயே நடித்துள்ளனர். 

அமிதாப் நடிப்பில் வெளியாகி வெற்றியைப் பெற்ற ‘டான்’ படத்தை தமிழில் ‘பில்லா’ என ரீமேக் செய்து ரஜினி நடித்திருந்தார். இது ரஜினிக்கு பெரிய வசூலைக் கொடுத்த படங்களுள் ஒன்று!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

SCROLL FOR NEXT