முகப்பு
செய்திகள்

ஜிவி பிரகாஷின் ரிபெல்: முதல் பார்வை போஸ்டர் வெளியீடு

ஜிவி பிரகாஷ் குமார் நடித்துள்ள ரிபெல் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

Updated On : 27 அக்டோபர் 2023, 1:44 pm IST
கோப்புப்படம்
பகிர்:

ஜிவி பிரகாஷ் குமார் நடித்துள்ள ரிபெல் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் 10-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதில் கேப்டன் மில்லர், டைகர் நாகேஸ்வர ராவ், வணங்கான் ஆகிய திரைப்பங்கள் வெளியாக உள்ளது.

இவர் கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான ‘அடியே’ திரைப்படம், கலமையான விமரிசனங்களைப் பெற்றது. 

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் நிக்கேஷ் இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் ரிபெல் படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் நடித்து முடித்துள்ளார்.  சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில்,  படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இந்த நிலையில், ரிபெல் படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் டீசர், டிரைலர், வெளியீட்டுத் தேதி குறித்த தகவல்கள் விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.