செய்திகள்

எலிசா தாஸ்: லியோ படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்த மடோனா செபாஸ்டியன்!

DIN

பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மடோனா செபாஸ்டியன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை பெற்றவரும் ஆவார்.  

படம்: இன்ஸ்டாகிராம் 
படம்: இன்ஸ்டாகிராம் 

தமிழில் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும் படத்தில் அது மேலும் கூடியது. பின்னர் அவர் நடித்த தமிழ்ப்படங்கள் எதுவும் சரியாக அமையவில்லை. 

படம்: இன்ஸ்டாகிராம் 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வியாழக்கிழமை வெளியானது. ரசிகர்களிடம், இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

உலகளவில் 6000 திரைகளில் வெளியான லியோ முதல் வாரம் வசூலாக ரூ.416 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

லியோவில், விஜய்யின் தங்கையாக (இரட்டையர்) நடித்திருப்பார். குறைவான நேரம் இருந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான கதாபாத்திரமாக நடித்திருந்தார். 

பெரும் ஆதரவினை தொடர்ந்து நடிகை மடோனா செபாஸ்டியன் தனது எக்ஸ் பதிவில் அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். பலரும்  லியோ படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிருங்கள் எனக் கேட்டிருந்ததால் தற்போது பகிர்ந்துள்ளார். இன்னும் பல புகைபடங்களை விரைவில் பகிர உள்ளதாகவும் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

மாவோயிஸ்டுபோல் பேசுகிறாா் ராகுல்: பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக வெறுப்பு பிரசாரம் - தோ்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகாா்

வனப் பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்: ஈரான் அதிபரின் நிலை என்ன?

தனியாா் பள்ளிகளில் இலவசக் கல்வி: மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

SCROLL FOR NEXT