லியோ வெற்றிவிழா- அனுமதி குறித்து பரிசீலனை
லியோ திரைப்பட வெற்றிவிழாவுக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லியோ திரைப்பட வெற்றிவிழாவுக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்.19ஆம் தேதி வெளியான படம் லியோ. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் முதல் வாரத்தில் மட்டும ரூ.461 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் படத்தின் வெற்றி விழாவை நவம்பர் 1-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும இந்த விழாவுக்கு பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு படத் தயாரிப்பாளர் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் லியோ திரைப்பட வெற்றிவிழாவுக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முக்கிய பிரமுகர்களின் விவரங்கள் குறித்தும் நிகழ்ச்சி நடைபெறும் நேரம், டிக்கெட் விற்பனை குறித்தும் விவரம் கேட்கப்பட்டுள்ளது.
முன்னதாக லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த படக்குழு திட்டமிட்டு பின்னர் பாதுகாப்பு காரணங்களால் அது கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.