இறுகப்பற்று படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களிடையே பிரபலமான யுவராஜ் தயாளன் இறுகப்பற்று படத்தினை இயக்கியுள்ளார்.
நடிகர்கள் விக்ரம் பிரபு, மாநகரம் புகழ் ஸ்ரீ, விதார்த் ஆகியோர் நாயகர்களாகவும், நடிகைகள் ஷரத்தா ஸ்ரீநாத், அபர்ணா நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இந்த 3 ஜோடிகளின் காதல் கதையை படமாக எடுத்துள்ளார் இயக்குநர் யுவராஜ் தயாளன்.
எஸ்.ஆர். பிரபு, எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, பி. கோபிநாத், தங்கபிரபாகரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்துக்கு ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க: லியோ பிளாஷ்பேக் காட்சிகள் பொய்யானது: லோகேஷ் கனகராஜ்
இந்த நிலையில், இறுகப்பற்று திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் நவ.3 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.