செய்திகள்

கிடப்பில் இருந்த ராதிகாவின் தொடர்! ஒளிபரப்பு உரிமம் பெற்ற பிரபல டிவி!

ராதிகா நடிக்கும் தொடரின் படப்பிடிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கிய நிலையில், ஒளிபரப்பு உரிமமத்துக்காக எந்தவொரு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படாமல் இருந்தது. 

DIN


நடிகை ராதிகா நடிப்பில் உருவாகவுள்ள புதிய தொடர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. 

ராதிகா நடிக்கும் தொடரின் படப்பிடிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கிய நிலையில், ஒளிபரப்பு உரிமமத்துக்காக எந்தவொரு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படாமல் இருந்தது. 

இதனிடையே தற்போது முன்னணி தொலைக்காட்சி ஒன்று ராதிகாவின் புதிய தொடரை ஒளிபரப்பு செய்யும் உரிமையைப் பெற்றுள்ளது. 

வெள்ளித்திரையில் முன்னணி நாயகர்களுடன் நடித்தவர் நடிகை ராதிகா. எனினும் சித்தி தொடர் மூலம் 1999ஆம் ஆண்டு சின்னத்திரையில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி, சந்திரகுமார், சித்தி பாகம் 2 என பல தொடர்களில் நடித்து வந்தார். சமீபத்தில் பல புதுமையான தொடர்கள் ஒளிபரப்பாகிவரும் நிலையில், ராதிகா நடிப்பில் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், தனது சொந்த நிறுவனமான ரடான் மீடியா தயாரிப்பில் தாயம்மா தொடரில் நடிகை ராதிகா நடிக்கத் தொடங்கினார். இந்தத் தொடர் முன்பு பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்டது. எனினும் ஒளிபரப்பாவது ஒத்திவைக்கப்பட்டு வந்தது. 

தற்போது கலைஞர் தொலைக்காட்சி தாயம்மா தொடரை ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண் கவர் பொருங்கோட... மேகா!

டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் பாடிய ‘சிங்காரி’ பாடல் வெளியீடு!

பல பொருள் - ஒரு சொல் பயில்க

குரலினிது... ஷ்ரேயா கோஷால்!

ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன்செய்த ஜடேஜா; எட்டிப் பிடிக்கும் தூரத்தில் சச்சினின் சாதனை!

SCROLL FOR NEXT