ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் ரஜினிகாந்த்துடன் சன் பிக்சர்ஸ் இணைகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
இதையும் படிக்க: லியோவுக்கான கதையில் யார் வில்லன்?
இயக்குநர் லோகேஷ் தற்போது விஜய்யின் லியோ படத்தினை முடித்துள்ளார். இந்தப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. தற்போது லோகேஷ் கன்கராஜ் ‘தலைவர் 171’ படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.
4 வருடங்களுக்கு முன்பு எழுதிய கதையில் சிறு மாற்றங்களை மட்டும் செய்ய வேண்டுமென இது குறித்து லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: காதலரை விரைவில் அறிவிப்பேன்: ஸ்ரீ திவ்யா
லியோ தொடர்பான நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ், “ரஜினி சாரின் வில்லத்தனம் எனக்கு மிகவும் பிடிக்கும். தலைவர் 171 படத்தில் ரஜினி சாரின் வில்லத்தனத்தை இன்னும் அதிகமாக பயன்படுத்த முயற்சிப்பேன். மிகவும் எதிர்பார்ப்புமிக்க கதையாக இருப்பதால் எனக்கும் ஆர்வமாக இருக்கிறது. மார்ச் அல்லது ஏப்ரலில் இதற்கான படப்பிடிப்பு தொடங்குவேன்” எனக் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது தா.சே.ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.