செய்திகள்

கார் பரிசளித்த தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் நெல்சன்

ஜெயிலர் படத்திற்காக கார் பரிசளித்தமைக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறனுக்கு இயக்குநர் நெல்சன் நன்றி தெரிவித்துள்ளார். 

DIN

ஜெயிலர் படத்திற்காக கார் பரிசளித்தமைக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறனுக்கு இயக்குநர் நெல்சம் நன்றி தெரிவித்துள்ளார். 

ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். நெல்சன் இயக்கியிருந்த இந்த படம் வெளியான நாள் முதல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 2.0 படத்துக்கு பிறகு ரூ. 500 கோடி வசூலைக் கடந்த ரஜினியின் படமாக ஜெயிலர் அமைந்தது. இதையடுத்து படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 

பின், லாபத்திலிருந்து தான் விருப்பப்பட்ட தொகையை அவருக்கு செக் மூலம் தந்ததுடன் ரூ.1.64 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ ரக சொகுசு கார் ஒன்றையும் பரிசளித்துள்ளார். இரண்டு பிஎம்டபிள்யூ  ரக கார்களை ரஜினியின் இல்லத்திற்குக் கொண்டு வந்த கலாநிதி மாறன் ரஜினிக்கு பிடித்த ‘பிஎம்டபிள்யூ எக்ஸ்7’ காரை பரிசாக வழங்கினார். இதேபோல் படத்தின் இயக்குநர் நெல்சனுக்கும் கார் ஒன்றை பரிசாக படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் வழங்கினார். 

இந்த நிலையில் ஜெயிலர் படத்திற்காக கார் பரிசளித்தமைக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறனுக்கு இயக்குநர் நெல்சன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் நெல்சன் தனது ட்விட்டர் பதிவில், ஜெயிலரின் வெற்றிக்காக இந்த அழகான காரை எனக்கு பரிசளித்ததற்கு மிக்க நன்றி கலாநிதிமாறன் சார். உங்களுடன் இணைந்ததில் உண்மையிலேயே பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். 

நீங்கள் காசோலை தந்தது எனக்கு கூடுதல் ஆச்சரியம். ரஜினிகாந்த் சாருக்கு நன்றி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT