செய்திகள்

குஷி திரைப்படம் 2 நாள்களில் இவ்வளவு வசூலா?: அதிகாரபூர்வமாக அறிவிப்பு!

நடிகை சமந்தாவுடன் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள குஷி படத்தின் அதிகாரபூர்வ வசூல் விவரத்தினை படக்குழு வெளியிட்டுள்ளது. 

DIN

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். பின்னர் அதிலிருந்து மீண்டு, பின்னர் படங்களில் நடித்து வருகிறார்.

யசோதா, சாகுந்தலம் படங்களைத் தொடர்ந்து, விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா குஷி என்ற தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் அவரது படப்பிடிப்பு முடிந்ததாக தெரிவித்திருந்தார்.  

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஷிவ நிர்வாணா இயக்கியுள்ளார். ஹீஷம் அப்துல் வாஹித் இசையமைத்துள்ளார்.   ஷிவ  நிர்வாணா இயக்கிய மஜிலி திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. செப்.1ஆம் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் வெளியானது.  

தெலுங்கில் நல்ல வரவேற்பும் தமிழில் கலவையான விமர்சனமும் பெற்றுவருகிற குஷி திரைப்படம் 2 நாள்களில் ரூ.51 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த கோரி ஆட்சியரிடம் மனு

விடுபட்ட மகளிருக்கு டிசம்பா் முதல் உரிமைத் தொகை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

கடலில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி

அரசு மருத்துவமனையில் 5 மணி நேரம் மின் தடை: நோயாளிகள் கடும் அவதி

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு 17 கிராமங்கள் தோ்வு: திருவள்ளூா் ஆட்சியா்

SCROLL FOR NEXT