செய்திகள்

ஜெயிலர் வெற்றி: அனிருத்துக்கு காசோலை பரிசளிப்பு! 

ஜெயிலர் படத்தின் வெற்றிக்காக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அனிருத்துக்கு காசோலை பரிசளித்துள்ளார்.

DIN

ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். நெல்சன் இயக்கியிருந்த இந்தப் படம் வெளியான நாள் முதல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ரூ. 600 கோடி வசூலைக் கடந்து ஜெயிலர் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பின், லாபத்திலிருந்து தான் விருப்பப்பட்ட தொகையை அவருக்கு காசோலை மூலம் தந்ததுடன் ரூ.1.64 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ ரக சொகுசு கார் ஒன்றையும் பரிசளித்துள்ளார்.

இதேபோல் படத்தின் இயக்குநர் நெல்சனுக்கும் கார் ஒன்றை பரிசாக படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் வழங்கினார். 

ரசிகர்கள் அனிருத்துக்கு ஏதுமில்லையா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத்துக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் காசோலையை அளித்து பாராட்டியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT