செய்திகள்

100 குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்: குஷி வெற்றிக்கு விஜய் தேவரகொண்டா அறிவிப்பு!

குஷி படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தேவர்கொண்டா ரூ.1 கோடியை 100 குடும்பங்களுக்கு பிரித்து கொடுக்க உள்ளார். 

DIN

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த குஷி படத்தை ஷிவ நிர்வாணா இயக்கியுள்ளார். யசோதா, சாகுந்தலம் படங்களைத் தொடர்ந்து, விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா குஷி என்ற தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார். ஹீஷம் அப்துல் வாஹித் இசையமைத்துள்ளார்.  

ஷிவ நிர்வாணா இயக்கிய மஜிலி திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. செப்.1ஆம் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் வெளியானது.

காதல், காமெடி, எமோஷனல் என தெலுங்கில் நல்ல வரவேற்பும் தமிழில் கலவையான விமர்சனமும் பெற்றுவருகிற குஷி திரைப்படம் 3 நாள்களில் ரூ.70.23 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது தியேட்டர்களின் எண்ணிகையும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடந்த வெற்றி விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சியுடன் பேசினார். குஷி பட வெற்றிக்கு ரூ.1 கோடியை மக்களுடன் பகிர்ந்துக்கொண்டால்தான் தூக்கம் வரும். 100 குடும்பங்களை தேர்ந்தெடுத்து தலா ரூ.1 இலட்சம் பரிசளிக்க இருப்பதாக கூறியிருந்தார். தற்போது அதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 

ஒரு விண்ணப்ப படிவம் ஒன்றினை பகிர்ந்துள்ளார். 100 குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இதை பரிசளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ஏழை குடும்பங்களுக்கு படிப்பு அல்லது மருத்துவ செலவிற்கு இந்தப் பணம் உதவினால் மகிழ்ச்சியாக இருக்குமென தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி படத்தில் கொலை செய்யப்படுவேனா? ஷ்ருதி ஹாசன் விளக்கம்!

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி

சீனாவில் கனமழையால் நிலச்சரிவு! 7 பேர் மாயம்..மக்கள் வெளியேற்றம்!

வெள்ளத்தால் உருக்குலைந்த கிராமம்! கழுகுப்பார்வை காட்சிகள்! | Uttarakhand | Cloud Burst

சிவகார்த்திகேயன் குரலில் ஓ காட் ஃபியூட்டிஃபுல் பாடல்!

SCROLL FOR NEXT