செய்திகள்

கமல்ஹாசனுக்கு வில்லனான எஸ்.ஜே.சூர்யா!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படத்தில் தான் நடித்துள்ளதை அறிவித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

DIN

லைகா தயாரிப்பில்  ஷங்கர் இயக்கத்தில் அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் - 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாகவும் அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும், சில மாதங்களாக இப்படத்தில் முக்கிய வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து வருவதாக கூறப்பட்டுவந்தது. ஆனால், இதுகுறித்து நம்பத்தகுந்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் எஸ்.ஜே.சூர்யாவிடம், “நீங்கள் ஒருபடத்தில் கமல்ஹாசனுக்கும் மற்றொரு படத்தில் ராம் சரணுக்கு வில்லனாக நடித்து வருகிறீர்கள். தற்போது, மார்க் ஆண்டனியில் விஷாலுக்கு வில்லனாக நடித்துள்ளீர்கள். இந்த அனுபவம் எப்படி இருக்கிறது?” எனக் கேள்வியெழுப்பப்பட்டது. 

அதற்கு எஸ்.ஜே.சூர்யா, “சூப்பராதான் இருக்கு” எனக் கூறியுள்ளார். இதனால், இந்தியன் - 2 படத்தில் கமலுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா களம் இறங்கியிருக்கிறார்  என்பது உறுதியாகியுள்ளது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT