செய்திகள்

வில்லனாக நடிக்கும் 'பாவம் கணேசன்' தொடரின் நவீன்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் நடிகர் நவீன்.

DIN


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் நடிகர் நவீன் வில்லனாக நடிக்கவுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் நடிகர் நவீன். பல பிரபலங்களின் குரலில் பேசி நடிப்பதன் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். 

விஜய் தொலைக்காட்சியின் பாவம் கணேசன் தொடரில் நாயகனாக நடிகர் நவீன் நடித்தார். அவ்வபோது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சூர்யாவின் சூரறைப் போற்று படத்தில் அப்துல் கலாம் பாத்திறத்திற்கு குரல் கொடுத்தவர் நவீன்தான்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அப்துல் கலாம் குரல் பேசி வென்றார். 

நவீன் தற்போது தாய் கிரியோஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய தொடரில் வில்லனாக நடிக்கவுள்ளார். நீ நான் காதல் என இந்தத் தொடருக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தொடர், தெலுங்கில் வெற்றிபெற்ற நுவ்வு நேனு பிரேமா தொடரிம் மறுவுருவாக்கம்.

நடிகை சாய் காயத்ரி நாயகியாக நடிக்கிறார். இவர் கனா காணும் காலங்கள், ஈரமான ரோஜாவே, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர். தற்போது நீ நான் காதல் தொடர் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT