செய்திகள்

பிக்பாஸ் - 7: கமல்ஹாசன் சம்பளம் இத்தனை கோடிகளா?

பிக்பாஸ் 7-வது சீசனுக்கான நடிகர் கமல்ஹாசனின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

விஜய் டிவியில் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட நிகழ்ச்சி என்றால் அது உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிதான்.   

இதுவரை வெளியாகியுள்ள  6 சீசன்களும் மிகப்பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அதன் 7வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருந்தனர். தற்போது அதன் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

2017ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியின் வெற்றிகரமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பிக் பாஸுக்குதான் முதலிடம். விஜய் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி எப்போது துவங்கினாலும் அதன் டிஆர்பி என்பது புதிய சிகரத்தை எட்டும்.

அந்த வகையில் தற்போது அதன் அடுத்த சீசன் விரைவில் துவங்க உள்ளது. இந்த முறையும் கமல்தான் தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்நிலையில், 7-வது சீசனை தொகுத்து வழங்க நடிகர் கமல்ஹாசனுக்கு ரூ.130 கோடி சம்பளம் தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியே இவ்வளவு பெரிய சம்பளத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்

ஒடிஸாவில் மோசமான வானிலை: முதல்வா் பயணித்த விமானம் தரையிறங்க முடியாததால் பரபரப்பு

ஜிஎஸ்டி குறைப்பின் பயன் நுகா்வோருக்கு முழுமையாகக் கிடைப்பதை அரசு கண்காணிக்கும்: வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல்

4-ஆவது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவா் தற்கொலை

நாட்டில் இதய நோய்களால் 31% போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT