செய்திகள்

தேசிய விருதுகள் படத்தின் தரத்தினை நிர்ணயிப்பதில்லை: வெற்றிமாறன் 

DIN

நாட்டின் 69-வது தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில் மொழிவாரித் தேர்வில் தமிழில் சிறந்த படமாக கடைசி விவசாயி தேர்வாகியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சார்பட்டா பரம்பரை, ஜெய் பீம் படங்களுக்கு எந்த ஒரு விருதும் தரப்படவில்லை என்பது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் சினிமா பிரபலங்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜெய் பீம் படம் சூர்யா, மணிகண்டன் நடிப்பில் தா.சே.ஞானவேல் இயக்கத்தில் அமேசான் ப்ரைமில் வெளியாகி இந்திய அளவில் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

பலரும் இது குறித்து கவலை தெரிவித்திருந்த நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், “தேசிய விருதுகள் படத்தின் தரத்தினையோ சமூகத்தின் பங்களிப்பினையோ நிர்ணயிப்பதில்லை. அதேசமயம் தேர்வுக்குழுவினரின் தேர்வுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் ஏனெனில் நாம்தான் படத்தினை அனுப்புகிறோம். ஜெய் பீம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வலௌவான தாக்கத்தினை ஏற்படுத்தியது. இதற்கு தேசிய விருது கிடைத்திருந்தால் அதன் படக்குழுவிற்கு சிறிது அங்கீகாரமாக இருந்திருக்கும்” எனக் கூறியுள்ளார். 

வட சென்னை படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து ரசிகர்கள் வருத்தம் தெரிவித்திருந்தனர். வெற்றிமாறன் படங்கள் இதுவரை 5 முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது. 

தற்போது வெற்றிமாறன் விடுதலை 2 படம் இயக்கி வருகிறார். அடுத்து வாடிவாசல் படம் இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

வெள்ளப் பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

"தென் - வட மாநில மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார் மோடி " - சித்தராமையா

நடிகர் பிரபாஸுக்கு திருமணமா ? இன்ஸ்டா ஸ்டோரி வைரல் !

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: 3 பேர் பலி!

SCROLL FOR NEXT