செய்திகள்

வெளியானது ரத்தம் டிரைலர்! 

DIN

தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 எடுத்து தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குநர் சிஎஸ் அமுதன். அவர் இயக்கியுள்ள புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இப்படத்திற்கு ரத்தம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ஆகிய 3 நாயகிகள் நடித்துள்ளனர். 

இசை- கண்ணன் நாராயணன். ஒளிப்பதிவு- கோபி அமர்நாத். சண்டைப் பயிற்சி- திலீப் சுப்பராயன். கடந்தாண்டு வெளியான ‘ரத்தம்’ பட டீசரில் சிறப்புத் தோற்றத்தில் இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், வெங்கட்பிரபு ஆகியோர் இருந்தது குறிப்பிடத்தக்கது.  

முதல் பார்வை போஸ்டர், முதல் பாடல், இரண்டாவது பாடல், இசை வெளியீட்டு விழா, இசை வெளியீட்டு விழாவில் சர்ச்சையான பேச்சு என சகலவிதமான தமிழ் சினிமாவின் போக்கினை கிண்டல் செய்து படத்தின் ரிலீஸ் தேதியினை விஜய் ஆண்டனி சமீபத்தில் வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரினை இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளனர். படம் செப்.28 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் தேரோட்டம்: திரளானோர் பங்கேற்பு!

தோல்விக்கு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறிய காரணம் என்ன தெரியுமா?

பாஜக பிரமுகா் மீது தாக்குதல்: பாஜக மாவட்டத் தலைவர் கைது

ஆப்கானிஸ்தானில் வெள்ளம்: 50 பேர் பலி!

அரவிந்த் கேஜரிவால் இன்று மாலை பிரசாரத்தை தொடங்குகிறார்

SCROLL FOR NEXT