செய்திகள்

மார்க் ஆண்டனி படத்தில் சில்க்காக நடித்தவர் யார் தெரியுமா? 

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள படம் மார்க் ஆண்டனி. இதில் சில்க் ஸ்மிதாவாக நடித்துள்ள பெண் இணையத்தில் வைரலாகியுள்ளார். 

DIN

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும் படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

சில்க் ஸ்மிதா

படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

சில்க் ஸ்மிதா

படத்தின் டிரைலர் ஞாயிற்றுக்கிழமை (செப். 3) வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருவதுடன் யூடியூப்பில் வேகமாக 2 மில்லியன் (2.5 கோடி) பார்வைகளைக் கடந்து டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. 

மார்க் ஆண்டனி படத்தில்... 

இந்தப் படத்தில் சில்க் ஸ்மித்தாக நடித்துள்ள கதாபாத்திரம் இணையத்தில் வைரால்கியுள்ளது. ஆந்திராவை சேர்ந்த டிக்டாக், இன்ஸ்டாகிராம் பிரபலம் விஷ்ணுபிரியா காந்தி என்பவர்தான் சில்க்காக நடித்துள்ளார்.

விஷ்ணுபிரியா காந்தி

இவர் சில வருடங்களுக்கு முன்பு சில்க் ஸ்மிதா போல் இருப்பதாக வைரலானவர். தற்போது மார்க் ஆண்டனி படத்தில் சில்க்காக நடித்துள்ளார். சில விஎஃபெக்ஸ் காட்சிகள் உதவியுடன் உண்மையான சில்க் போல மாற்றியுள்ளதாக இயக்குநர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

சமூக வலைதளத்தில் மீண்டும் விஷ்ணுப்ரியா டிரெண்டாகி வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களும் அதிகரித்துள்ளனர்.  

என்ன இருந்தாலும் ஒரிஜினல் சில்க் மாதிரி யாரும் வரமுடியாதென சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT