செய்திகள்

ஜவான்: தமிழ், ஹிந்தி வெளியீட்டில் இந்த வித்தியாசத்தைக் கவனித்தீர்களா?

ஜவான் படம் தமிழில் வேறாகவும் ஹிந்தியில் வேறாகவும் படமாக்கப்பட்டுள்ளது. அந்த வித்தியாசம் என்ன தெரியுமா? 

DIN

அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அனிருத் இசையமைத்த இப்படத்தில்  நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் செப்.7ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் 4,500 திரைகளில் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் படத்தின் வசூல் ஜெட் வேகத்தில் உள்ளது. படக்குழு 4வது நாள் முடிவில் ரூ. 520.79 கோடி வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளது. 

ஜவான் ஹிந்தியில் எடுக்கப்பட்டு தமிழ், தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியானது. ஆனால் தமிழுக்கும் ஹிந்திகும் வித்தியாசம் இருக்கிறது. தமிழில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடித்திருப்பார். ஹிந்தியில் இவருக்கு பதிலாக முகேஷ் சப்ரா நடித்திருக்கிறார். 

ஜவான் பரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற யோகிபாபு ஹிந்தி ஜவானில் இல்லாதது ரசிகர்களுக்கு வருத்தமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ஹிந்தியில் யோகி பாபு கதாபாத்திரத்தில் நடித்தவர். 

தெறி படத்தில் நடிகர் விஜய்யுடன் யோகிபாபு நடித்த காட்சிகள் படத்தின் நீளம் காரணமாக எடிட்டிங்கில் நீக்கப்பட்டது. அதனால் எனது அனைத்து படங்களிலும் யோகிபாபு இருக்க வேண்டுமென அட்லி கூறியதாக யோகிபாபு மேடையில் கூறினார். அதனால் கதை கேட்காமலே ஜவானில் நடித்ததாகவும் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT