செய்திகள்

நான் ரெடி: 10 ஆண்டுகளுக்கு பிறகு செல்வராகவனுக்கு பதிலளித்த த்ரிஷா!

இயக்குநர் செல்வராகவனின் ட்விட்டர் பதிவுக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை த்ரிஷா பதிலளித்துள்ளார்.

DIN

இயக்குநர் செல்வராகவனின் ட்விட்டர் பதிவுக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை த்ரிஷா பதிலளித்துள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் வெங்கடேஷ், த்ரிஷா நடிப்பில் தெலுங்கு மொழியில் வெளியான படம் ‘ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே’.

இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தமிழில் தனுஷ், நயன்தாரா நடிப்பில் ‘யாரடி நீ மோகினி’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ஹிட்டானது.

இந்த நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு செல்வராகவன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

“ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே திரைப்படத்தை நீண்ட நாள்களுக்கு பிறகு மீண்டும் பார்த்தேன். வெங்கடேஷ் மற்றும் த்ரிஷாவுடன் பணியாற்றதில் மகிழ்ச்சி. ஆனால், இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் இல்லை.” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், செல்வராகவனின் ட்வீட்டை 10 ஆண்டுகளுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை(நேற்று) ரீட்வீட் செய்து, ‘நான் தயார்’ என்று த்ரிஷா பதிலளித்துள்ளார்.

த்ரிஷாவின் திடீர் ட்வீட்டால், ‘ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT