ஹலிதா ஷமீம், எஸ்தர் அனில் 
செய்திகள்

வெளியானது ஹலிதா ஷமீமின் மின்மினி பட போஸ்டர்!

இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள மின்மினி படத்தின் முதல் பார்வை  போஸ்டர் வெளியாகியுள்ளது. 

DIN

‘பூவரசம் பீப்பி’, ‘சில்லு கருப்பட்டி’, ‘ஏலே’ மற்றும் ‘லோனர்ஸ்’ உள்ளிட்ட விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ஹலிதா ஷமீமின் முந்தைய படைப்புகள் காரணமாக ‘மின்மினி’ படத்திற்கு பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன.

இயக்குநர் ஹலிதா ஷமீம் உடன் கதீஜா ரஹ்மான்

‘மின்மினி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

எஸ்தர் அனில்

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஆங்கர் பே ஸ்டுடியோவுடன் இணைந்து ‘மின்மினி’ படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தில் எஸ்தர் அனில், பிரவின் கிஷோர், கெளரவ் காளை, பிரவின் மற்றும் கெளரவ் ஆகியோர் முதன்மை நடிகர்களாக நடித்துள்ளனர். ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். 

நடிகர்களின் உண்மையான வயதையும் பருவத்தையும் திரையில் காட்ட வேண்டும் என்பதற்காக எட்டு வருடங்களாக காத்திருந்து ஒரு திரைப்படத்தை படமாக்கும் அதன் முயற்சி சினிமா பார்வையாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. 

இந்நிலையில் இயக்குநர் ஹலிதா ஷமீம் பிறந்தநாளில் மின்மினி படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

சூடான உணவுப் பாத்திரத்தில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

SCROLL FOR NEXT