செய்திகள்

தமிழ்த் திரையுலகின் பெரும் அடையாளம்: வடிவேலுக்கு மாரி செல்வராஜ் வாழ்த்து! 

நடிகர் வடிவேலு பிறந்தநாளுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN

மாமன்னன் திரைப்படத்திற்குப் பின் நடிகர் வடிவேலுக்கு புதிய திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அவர் நடிப்பில் தயாரான ‘சந்திரமுகி - 2’ திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. மேலும், தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். 

மாமன்னனில் மிகச்சிறப்பாக நடித்த வடிவேலுவை இனி நல்ல கதாபாத்திரத்திற்காகவும் பயன்படுத்த இயக்குநர்கள் முடிவு செய்துள்ளனர். அதற்காக,  நிறைய கதைகளை வடிவேலு கேட்டு வருகிறார். தனது சம்பளத்தை உயர்த்தியதகவும் தகவல்கள் வெளியானது. 

மாமன்னன் படத்தில் நடிகர் வடிவேலு தனது வழமையான நகைச்சுவை பாணியை கைவிட்டு புதுமாதிரியாக நடித்திருந்தார். மாமன்னன் படமும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. உதயநிதி ஸ்டாலினுக்கு இது கடைசி படம் எனக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “தமிழ்த்திரையுலகின் பெரும் அடையாளமாக இருக்கும் அன்பு அண்ணன் வைகைபுயல் வடிவேல் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். மாமன்னன்” எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: மூதாட்டியின் ரூ. 17 லட்சத்தை மீட்ட போலீசார்! எப்படி?

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்! தவெக உள்பட 20 கட்சிகள் புறக்கணிப்பு!

இந்திய ரசிகர்களை அமைதியாக்குவோம்! - கம்மின்ஸ் ஸ்டைலில் மிரட்டிய தெ.ஆப்பிரிக்க கேப்டன்

பிகாரில் மகா கூட்டணி ஆட்சியில் தலித், முஸ்லீம் துணை முதல்வர்கள்! - தேஜஸ்வி சூசகம்!

சொல்லப் போனால்... பிரதமர் பேச்சும் புலம்பெயர் வாழ்வும்!

SCROLL FOR NEXT