படம்: ட்விட்டர் 
செய்திகள்

சக கலைஞராக ஏ.ஆர்.ரஹ்மானுடன் துணை நிற்கிறேன்: யுவன்

இசை நிகழ்ச்சி குளறுபடி விவகாரத்தில் சக கலைஞராக ஏ.ஆர்.ரஹ்மானுடன் துணை நிற்பதாக இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

DIN

சென்னை: இசை நிகழ்ச்சி குளறுபடி விவகாரத்தில் சக கலைஞராக ஏ.ஆர்.ரஹ்மானுடன் துணை நிற்பதாக இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியான ‘மறக்குமா நெஞ்சம்’ சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள பனையூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிய ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு இருக்கை ஒதுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

மேலும், கிழக்கு கடற்கரைச் சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் சென்னை மக்கள் திணறியது இணையத்தில் கடந்த இரண்டு நாள்களாக பேசு பொருளாகியுள்ளது.

இந்த சம்பவத்துக்கு இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ‘ஏசிடிசி ஈவண்ட்ஸ்’ மன்னிப்பு கேட்டதுடன், நிகழ்ச்சியில் பங்கேற்காதவர்கள் டிக்கெட் நகலை பதிவிடுங்கள் என்று ஏ.ஆர்.ரஹ்மானும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே பல்வேறு தரப்பினர் ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்து இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடியில் இருந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். ரசிகர்களின் பாதுகாப்பை ஏற்பாட்டாளர்கள் கவனித்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் மேடையில் நாங்கள் உள்ளோம்.

திட்டமிடல், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றில் அனைத்து கலைஞர்களும் பங்காற்றுவது அவசியம் என்பது இதிலிருந்து தெரிகிறது. சக இசை கலைஞராக ஏ.ஆர்.ரஹ்மானுடன் துணை நிற்கிறேன்.

இந்த சம்பவத்தில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு வரும் காலங்களில் மேம்படுத்தப்படும் என்று நம்புகிறேன். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான வசதிகளை உறுதி செய்ய வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புதுகை ஆட்சியரகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

ஆன்லைன் வா்த்தக மோசடி மூலம் ரூ.11 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

சரக்கு வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT