செய்திகள்

ரத்தம் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ரத்தம் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது.

DIN

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ரத்தம் படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப்படம் இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இப்படத்திற்கு ரத்தம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ஆகிய 3 நாயகிகள் நடித்துள்ளனர். 

இசை- கண்ணன் நாராயணன். ஒளிப்பதிவு- கோபி அமர்நாத். சண்டைப் பயிற்சி- திலீப் சுப்பராயன். கடந்தாண்டு வெளியான ‘ரத்தம்’ பட டீசரில் சிறப்புத் தோற்றத்தில் இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், வெங்கட்பிரபு ஆகியோர் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இப்படம்  வரும் அக்டோபர் 6-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில், ரத்தம் படத்தின் முதல் பாடலான 'ஒரு நாள்' பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT