செய்திகள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் கடைசி எபிசோட் எப்போது?

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் கடைசி எபிசோட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் கடைசி எபிசோட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018ஆம் ஆண்டுமுதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகிவருகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்த தொடர் அண்ணன், தம்பிகள் 4 பேரைச் சுற்றி அமையும் கதைக்களம் கொண்டது. இதில் ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

சிவ சேகர், டேவிட் சார்லி ஆகியோர் இயக்கத்தில் பிரியா தம்பி திரைக்கதையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் உருவாகி வருகிறது. இத்தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இரண்டாம் பாகத்தையும் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடரின் கதையின்படி தனத்திற்கு(சுஜிதா) புற்றுநோய் குணமடைந்து, அண்ணன், தம்பிகள் ஒன்றுசேர்ந்து புது இல்லத்துக்கு செல்வது போன்ற அனைத்து பிரச்னைகள் முடிவுக்கு வரவுள்ளன.

இந்த நிலையில், வரும் செப்.30 ஆம் தேதியுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தொடர் ஒளிப்பரப்பாகும் நேரத்தில்  பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இரண்டாம் பாகம் ஒளிப்பரப்பாகுமா அல்லது அதே நேரத்துக்கு வேறோரு தொடர் ஒளிப்பரப்பாகுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

SCROLL FOR NEXT