செய்திகள்

நான் பிக் பாஸ் வீட்டுக்குப் போக மாட்டேன்: பிரபல நடிகை விளக்கம்!

நான் பிக் பாஸ் வீட்டுக்கு போக மாட்டேன் என்று நடிகை ரேகா நாயர் விளக்கம் அளித்துள்ளார்.

DIN

நான் பிக் பாஸ் வீட்டுக்கு போக மாட்டேன் என்று நடிகை ரேகா நாயர் விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில்  விரைவில் பிக் பாஸ் -7 நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.  இந்த முறை பிக் பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டிருப்பதாக கமல் கூறும் இரண்டாவது முன்னோட்ட விடியோ வைரலானது.

ஏற்கெனவே ஒளிபரப்பான அனைத்து சீசன்களையும் தொகுத்து வழங்கியவர் கமல்ஹாசன்தான்.  இந்த சீசனையும் அவரே தொகுத்து வழங்குகிறார். 

தற்போது பிக்பாஸ் -7 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. 

அதன்படி, நடிகை தர்ஷா குப்தா, அம்மு அபிராமி, நடிகர் அப்பாஸ், தொகுப்பாளர் ரக்‌ஷன், தொகுப்பாளினி ஜேக்லின், ஸ்ரீதர் மாஸ்டர், நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷ், நடிகர் சந்தோஷ் பிரதாப், நடிகை ரேகா நாயர், நடிகர் பிரித்விராஜ்(பப்லு) உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியது.

பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரேகா நாயர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.

இந்த நிலையில், நடிகை ரேகா நாயர் “தனியாக காட்டில் வேண்டுமானாலும் இருப்பேனே தவிர, நான் பிக் பாஸ் வீட்டுக்கு போக மாட்டேன். 100 நாள்கள் தங்குவதற்கு பதில் 100 மரங்களை நடலாம். கடந்த 3 சீசன்களாக நான் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதாக தகவல் பரவி வருகிறது” என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

ரயிலில் பெண்கள் மீது தாக்குதல்: இளைஞா் கைது

மெட்ரோ கட்டுமானப் பணிகள்: இன்று முதல் தில்லி லுட்யன்ஸ் பகுதியில் பொதுப் போக்குவரத்து மூடல்

SCROLL FOR NEXT