செய்திகள்

பிரபல சீரியல் நடிகைக்கு இரட்டைக் குழந்தைகள்!

பிரபல சீரியல் நடிகை ஸ்வேதா பண்டேகருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது.

DIN

பிரபல சீரியல் நடிகை ஸ்வேதா பண்டேகருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது.

நடிகை ஸ்வேதா பண்டேகர் ஆழ்வார் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்தவர். இவர், மேலும் சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். 

இவர் சன் டிவியில் ஒளிப்பரப்பான சந்திரலேகா சீரியலின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இவருக்கு கடந்த ஆண்டு முருகன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், கர்ப்பமாக இருந்த ஸ்வேதா பண்டேகருக்கு, தற்போது இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

அதில் ஸ்வேதா, "ஆக.30 அன்று  மால், ஸ்வெப்னா என்ற இரண்டு முழு நிலவை கண்டோம். இரண்டும் வெவ்வேறானவை. இரண்டும் நன்றாக பிரகாசிக்கின்றன. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்வேதா பண்டேகர் தனக்கு இரட்டை குழந்தை பிறந்ததை அறிவித்ததையடுத்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

மின்வாரியப் பணியாளா்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி

இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

கிணற்றில் இருந்து பெண் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT