செய்திகள்

இனி 30 நாள்களும் தொடர்ந்து லியோ அப்டேட்: வெளியானது புதிய போஸ்டர்!

லியோ படம் வெளியாக இன்னும் 30 நாள்களே உள்ள நிலையில் இனி தினமும் அப்டேட் வெளியாகுமென லோகேஷ் கனகராஜ் கூறியது நிறைவேறி வருகிறது. 

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.  

இப்படத்தின் எடிட்டிங் பணிகளைத் தொடர்ந்து அடுத்ததாக விஎஃப்எக்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் தரத்தை தீவிரமாக மெறுகேற்றி வருகிறார்.  இப்படத்தின் இரண்டாவது பாடலும் விரைவில் வெளியாக உள்ளது. 

இந்நிலையில் இனி தினமும் 30 நாள்களுக்கு லியோ அப்டேட் இருக்குமென விருடு விழா ஒன்றில் லோகேஷ் கூறினார். அதன்படி நேற்று லியோ தெலுங்கு போஸ்டர் வெளியானது. அதன்படி இன்று கன்னட போஸ்டர் வெளியாகியுள்ளது.  

லோகேஷ் கனகராஜ் சொன்னது போலவே இனி தினமும் லியோ அப்டேட் வருமென்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா் சுகாதாரத் துறையில் புதிய காலிப்பணியிடங்கள்: டிச.2-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் சிறப்பு வழிபாடு

தேனும் நஞ்சாகும்!

உள்ளாட்சியில் சீர்திருத்தங்கள்!

மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி.க்கு பிடிஆணை

SCROLL FOR NEXT