செய்திகள்

புதிய தோற்றத்தில் நயன் - விக்கி குடும்பப் புகைப்படம்!

புதிய தோற்றத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் குடும்பப் புகைப்படம் வெளியாகியுள்ளது. 

DIN

புதிய தோற்றத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் குடும்பப் புகைப்படம் வெளியாகியுள்ளது. 

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று பெற்றோர்களாகவும் இருக்கின்றனர். 

பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படம் வெளியாகி கலவையான விமரிசனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து, ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள இறைவன் திரைப்படம் வருகிற செப்.28 ஆம் தேதி வெளியாகிறது.

நயன்தாரா  சிங்கப்பூர் தொழிலதிபர் ஒருவருடன் இணைந்து தோல் பராமரிப்பு மற்றும் அழகு சாதனப் பொருட்களை உற்பத்தி, இறக்குமதி செய்யும்  தொழிலை துவங்க உள்ளார்.

9ஸ்கின் எனப் பெயரிப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் துவக்க விழா செப்.29 ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறுகிறது. இதற்கான, விளம்பரப் பணிகளை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில், புதிய தோற்றத்தில் உள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவனின் குடும்பப் புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. மேலும், இவர்கள் நீச்சல் குளத்தில் குளிக்கும் மற்றோரு புகைப்படமும் வைரலாகி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT