செய்திகள்

விஜய் ஆண்டனி மகள் மறைவு: லியோ போஸ்டர் வெளியீடு ஒத்திவைப்பு!

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகளின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக லியோ படத்தின் இன்றைய அப்டேட்டை படக்குழு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

DIN

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகளின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக லியோ படத்தின் இன்றைய அப்டேட்டை படக்குழு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.  

இதையும் படிக்க | லியோவில் கமல்ஹாசன்?

இப்படத்தின் எடிட்டிங் பணிகளைத் தொடர்ந்து அடுத்ததாக விஎஃப்எக்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் தரத்தை தீவிரமாக மெறுகேற்றி வருகிறார்.  இப்படத்தின் இரண்டாவது பாடலும் விரைவில் வெளியாக உள்ளது. 

இந்நிலையில் இனி தினமும் 30 நாள்களுக்கு லியோ அப்டேட் இருக்குமென விருது விழா ஒன்றில் லோகேஷ் கூறினார். அதன்படி ஞாயிற்றுக்கிழமை லியோ தெலுங்கு போஸ்டரும், திங்கள்கிழமை கன்னட போஸ்டரும் வெளியானது.

தொடர்ந்து, லியோ படத்தின் மலையாள போஸ்டர் இன்று வெளியாகும் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர்.

ஆனால், விஜய் ஆண்டனியின் மகள் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய அப்டேட்டை நாளைக்கு ஒத்திவைப்பதாக லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வலியோடு முறியும் மின்னல்... கீர்த்தி ஷெட்டி!

கூலி படத்தில் கொலை செய்யப்படுவேனா? ஷ்ருதி ஹாசன் விளக்கம்!

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி

சீனாவில் கனமழையால் நிலச்சரிவு! 7 பேர் மாயம்..மக்கள் வெளியேற்றம்!

SCROLL FOR NEXT