செய்திகள்

பூஜையுடன் தொடங்கிய நயன்தாராவின் புதிய படம்!

நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது.

DIN

நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது.

பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படம் வெளியாகி கலவையான விமரிசனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து, ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள இறைவன் திரைப்படம் வருகிற செப்.28 ஆம் தேதி வெளியாகிறது.

நயன்தாரா முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்துக்கு மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 எனப் பெயரிடப்பட்டுள்ளது. கோலமாவு கோகிலா படத்துக்கு பிறகு  நயன்தாராவுடன் யோகிபாபு இப்படத்தில் நடிக்கிறார்.

பிரபல யூடியூப் சேனலில் புகழ்பெற்ற டூட் விக்கி இப்படத்தை எழுதி இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

மண்ணாங்கட்டி படத்தின் முதல் பார்வை போஸ்டர் முன்னதாக வெளியாகி, இணையத்தில் வைரலான நிலையில், இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

இப்பட பூஜையில் யோகிபாபு உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

இனிய தொடக்கம்... காவ்யா அறிவுமணி!

ஹரிஷ் கல்யாணின் டீசல் டீசர்!

விநாயகர் சதுர்த்தி... ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT