செய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பிரபலம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பிரபலம் ஒருவர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பிரபலம் ஒருவர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில்  பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 1ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆறு சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனே, இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார். இந்த முறை பிக் பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டிருப்பதாக கமல் கூறும்  முன்னோட்ட விடியோ வைரலானது.

பிக்பாஸ் -7 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ள போட்டியாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

அதன்படி தொகுப்பாளினி பாவனா, பாடகி ராஜலட்சுமி கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு முன்பு,  மாகாபா ஆனந்த், இந்திரஜா ஷங்கர், தொகுப்பாளர் ரக்‌ஷன், தொகுப்பாளினி ஜேக்லின், ரச்சிதாவின் கணவர் தினேஷ், நடிகர் சந்தோஷ் பிரதாப், நடிகர் பிரித்விராஜ்(பப்லு) ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்துவரும் குமரன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகவும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அடுத்த சீசன் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க இன்னும் எட்டு நாள்களே உள்ள நிலையில் அதில் பங்கேற்பவர்கள் குறித்த தகவல்கள் வெளிவந்த வண்ணமே உள்ளது. இருந்தாலும், தொடக்க நிகழ்ச்சி அன்றே பங்கேற்பாளர்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் நெரிசல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது! - பவன் கல்யாண்!

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்: விஜய்

கரூர் பலி: மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும்! - அமித் ஷா

கரூர் பலி: தமிழக அரசிடம் விளக்கம் கோரியது மத்திய அரசு!

கரூர் பலி: காங். தொண்டர்கள் அனைத்து உதவிகளையும் செய்ய ராகுல் காந்தி வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT