செய்திகள்

கவனம் ஈர்க்கும் உன்னி முகுந்தனின் கந்தர்வா அறிமுக விடியோ! 

மலையாள நடிகர் உன்னி முகுந்தனின் நடிப்பில் கந்தர்வா படம் உருவாகி வருகிறது. 

DIN

தமிழில் சீடன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் உன்னி முகுந்தன். மலையாள நடிகரான இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவரது சமீபத்திய மாளிகப்புரம் திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இவருக்கான மார்கெட் உயர்ந்துள்ளது. லிட்டில் பிக் பிலிம்ஸ் தயாரிக்கும் கந்தர்வா படத்தின் அறிமுக விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் பிரவீன் பிரபாஹாரம், சுஜின் சுஜதன் இணைந்து எழுதியுள்ள இப்படத்தினை அறிமுக இயக்குநர் விஷ்ணு அரவிந்த் இயக்குகிறார்.

கந்தர்வரகளின் உலகம் என படக்குழு ஒரு விடியோவினை வெளியிட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக படம் உருவாகி வருகிறது என்பதன் அடையாளமாக இந்த விடியோ இருக்கிறது. ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். 

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என 6 மொழிகளிலும் விடியோ வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

SCROLL FOR NEXT