செய்திகள்

வருண் தவானுடன் ஆட்டோவில் செல்லும் கீர்த்தி சுரேஷ்: வைரல் விடியோ!

வருண் தவானுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆட்டோவில் செல்லும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

DIN

வருண் தவானுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆட்டோவில் செல்லும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது என்ன மாயம் படத்தில் நாயகியாக அறிமுகமான கீர்த்திக்கு பெரிய வரவேற்பைப் பெற்றுத்தந்தது ரஜினி முருகன் திரைப்படம். அதன்பின், தொடரி, ரெமோ உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார்.

சமீபத்தில் வெளியான மாமன்னன் படத்திலும்  நாயகியாக நடித்திருந்தார். மாமன்னன் வெற்றிப்படமாக அமைந்ததால் தன்னுடைய சம்பளத்தை கீர்த்தி சுரேஷ் உயர்த்தியதாக கூறப்படுகிறது.

தற்போது, அட்லி இயக்கத்தில் வருண் தவானுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், வருண் தவானும், கீர்த்தி சுரேஷும் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஆட்டோவில் செல்வதாக தெரிகிறது. இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக நிா்வாகி கொலை வழக்கு: மேலும் இருவா் கைது

சிவகங்கையில் 11 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

கால்காஜி கோயிலில் சேவகா் அடித்துக் கொலை; 3 போ் கைது

இந்தியா, ஜப்பான் இடையே மாநில-மாகாண ஒத்துழைப்பு: பிரதமா் மோடி அழைப்பு

SCROLL FOR NEXT