செய்திகள்

நாக சைதன்யாவுடன் மீண்டும் ஜோடி சேரும் சாய் பல்லவி 

நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்.  

DIN

நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். 

கஸ்டடி படத்தைத் தொடர்ந்து நடிகர் நாக சைதன்யா, நடிக்கும் 23ஆவது படத்தை சந்து மொன்டேட்டி இயக்குகிறார். உண்மைச் சம்பவத்தை பின்னணியாகக்கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

சாய் பல்லவி ஏற்கெனவே நாக சைதன்யாவுடன் 2021ல் வெளியான சூப்பர் ஹிட் படமான ‘லவ் ஸ்டோரி’ படத்தில் நடித்திருந்தார்.

தற்போது இந்த ஜோடி மீண்டும் இணையவுள்ளது. படத்தை பன்னி வாசு தயாரிக்கிறார். கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் அல்லு அரவிந்த் வழங்குகிறார். படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், பல திரைப்பட தயாரிப்பாளர்கள் சாய் பல்லவியை அணுகினர். ஆனால் அவர்கள் அனைவரையும் நிராகரித்து வந்த சாய் பல்லவி தற்போது நாக சைதன்யாவுடன் ஜோடி சேர முன்வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT